முதல் பக்கம் | பட்டுப்புழு வளர்ப்புத் துறை - தமிழ்நாடு | வீடியோ தொகுப்பு | புத்தகங்கள்| கேள்வி பதில் | தொடர்பு கொள்ள | ||||
முதிர்ந்த பட்டுப்புழுக்கள் வளர்ப்புமுறை |
தமிழ்நாடு பட்டுப்புழு வளர்ப்புத்துறை | |||
மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் நிலைப்புழுக்கள் முதிர்ந்த புழுக்கள் எனப்படுகின்றன. பொதுவா இப்பருவத்தில் வெப்பநிலை 250 செல்சியஸ் என்ற அளவிலும் ஈரப்பதம் 70 சதமும் வளர்ப்பறைகளில் இருக்க வேண்டும். இலை அறுவடைமுறை
இம்முறை பட்டுப்புழுவின் வளர்ச்சிப் பருவத்திற்கேற்ற வகையில் மல்பெரி இலைகள் பறிக்கப்பட்டு பின் வளர்பறைகளுக்கு கொண்டு வரப்படுகின்றன. இலைகள் புழு வளர்ப்புத்தட்டுகளில் பரப்பப்பட்ட புழுக்கள் அவற்றில் வளர்க்கப்படுகின்றன. தண்டு அறுவடை முறை புழு வளர்ப்புத் தாங்கிகள் தண்டு அறுவடை முறை ஐந்தாம் நிலைப் புழுக்கள் நன்கு முதிர்ச்சியுற்றால் புழுக்களில் மேல் தோல் மேன்மையாகி பழுப்பு நிறத்தில் மாறத் தொடங்கும். இது பட்டுப்புழுக்கள் கூடு கட்டத் தயார்ராவதற்கு தோன்றும் அறிகுறிகள். புழுக்களைப் பட்டுக்கூடு படல்களில் எடுத்து விட வேண்டும். முதிர்ந்த பட்டுப்புழுக்கள் தங்கள் பட்டுச்சுரப்பிகளில் சுரக்கும் புரதச்சாற்றைக் கொண்டுபட்டுக்கூடுகளைப் பின்னுகின்றன. சந்திர வளையம் போன்று இருக்கும் பட்டுக்குடு பட்கள் ‘சந்திரகி’ எனப்படும் இப்படல்கள் மெலிதான மூங்கில் சட்டங்களைக் கொண்டு சீரான இடைவெளியில் வளையம் போன்று அமைந்தவை. ஐந்து முதல் ஏழு நாட்களில் பட்டுக்கூடுகள் உறுதியாகும் போது பட்டுக்கூடுகளை அறுவடை செய்யலாம். அறுவடை செய்யப்பட்ட பட்டுக்கூடுகள் இதற்கென அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட பட்டுக்கூடு சந்தைகளுக்கு உடனடியாக விற்பனைக்கு எடுத்துச் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. |
| |||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024 |
||||